ஈரோடு மாவட்டம், ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 திட்டத்தின் கீழ், தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி,பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கையேட்டினை வெளியிட்டார்கள்.

உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப., அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி , ஈரோடு மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநராட்சி துணை மேயர் வெ.செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு துணை தவைவர் கஸ்தூரி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் முனைவர்.பெ.குப்புசாமி, இணை இயக்குர் கே.சசிகலா, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் உட்பட பலர் உள்ளனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment