ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காடு, பர்கூர் காவல் சுற்று, காரணமாலை பள்ளம் சராகம் பகுதியில் இயற்கையாக ஆண் யானை குட்டி (வயது 5) ஒன்று இறந்து கிடந்ததை கண்டறியப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம், பர்கூர் கால்நடை மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் பரத், வனச்சரக அலுவலர் பிரகாஷ், வனவர், வனக்காப்பாளர், பர்கூர் கிராம வனக்குழு உறுப்பினர் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனர் முன்னிலையில் உடற் கூர்வு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு இரண்டு தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி.
No comments:
Post a Comment