ஈரோடு அமமுக சார்பில் முன்னாள் முதலமைச்சருக்கு நினைவஞ்சலி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 December 2022

ஈரோடு அமமுக சார்பில் முன்னாள் முதலமைச்சருக்கு நினைவஞ்சலி.


ஈரோட்டில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சிவபிரசாந்த் அறிவுரையின்படி, முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சம்பத்(எ)முத்துக்குமரன், மாவட்ட கழகத் துணைச்செயலாளர் சம்பத்குமார், மாவட்ட கழக இணைச்செயலாளர் பானுமதி, மொடக்குறிச்சி சட்டமன்ற பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் ஜான் (எ) நெல்சன், அக்ரகார பகுதி கழகச்செயலாளர் நேரு, கருங்கல்பாளையம் பகுதி கழகச்செயலாளர் பழமண்டி பாலமுருகன், சம்பத்நகர் பகுதி கழக செயலாளர் விஜய் ஆனந்த், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மூர்த்தி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கோட்டை சிவக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமதுராஜா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் செங்குப்ரகுபதி, இளம் ஆண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்ரீலதா, தகவல் தொழில்நுட்ப மகளிர் அணி செயலாளர் சங்கீதா, மாவட்ட மகளிர் அணி தலைவி மாலதி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் யூனியன் சண்முகம், மாவட்ட தொழிற்சங்கம் ராகவேந்திரன், வட்ட கழக செயலாளர், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment