பவானிசாகர் அரசு மேனிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவமுகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

பவானிசாகர் அரசு மேனிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவமுகாம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பெறுதல், மருத்துவச் சிகிச்சை மற்றும் ஆர்த்தோ அறுவைச்சிகிச்சை போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறும் நோக்குடன் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் 210 மாற்றுத்திறனாளி  பயனாளர்கள் கலந்து கொண்டு  பயனடைந்தார்கள். 

முகாமினை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமதி கோதை செல்வி அவர்கள் முன்னிலை வகிக்க பவானிசாகர் பேரூராட்சித்தலைவர் திரு மோகன்  துவக்கி வைத்தார். இம்முகாம் ஏற்பாட்டினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும்  வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியப் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் என அனைவரும் பங்கேற்று பணியாற்றினர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment