ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 January 2023

ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டித்தும், கைது செய்யக்கோரியும் கண்டன கோசங்கள்  எழுப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பெண்கள் உட்பட மாநில, மாவட்ட, சட்டமன்ற தொகுதி, ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ப.பெரிய காளையன் வரவேற்புரையாற்றினார். பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சத்தியமூர்த்தி, சத்தியமங்கலம் நகர செயலாளர் சிறுத்தை மூர்த்தி, புளியம்பட்டி நகர செயலாளர் தக்காளி ரவி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆம்னி துரை, நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் அ.சாமிநாதன், கல்வி, பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் அ.ரமேஷ்வளவன், பவானிசாகர் தொகுதி துணை செயலாளர் வை.ராமசந்திரன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட பொருளாளர் சீதாகௌரி, மாவட்ட பொறுப்பாளர் கோபால்சாமி, அரியப்பம்பாளையம் பேரூர் செயலாளர் க.ஈஸ்வரன், சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் சிறுத்தை சுப்பிரமணியன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் திருமாபிரபு, சத்தியமங்கலம் நகர துணை செயலாளர் தனுசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

ஈரோடு மாவட்ட செயலாளர் பெ.சா.சிறுத்தை வள்ளுவன் கண்டன உரையாற்றினார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் வை.குடியரசு, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், கண்டன உரையாற்றிய சிறப்பு அழைப்பார்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு மூத்த தலைவர் இரா.திருத்தணிகாச்சலம், தலித் விடுதலை கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் விடுதலை செல்வன், தமிழ் புலிகள் கட்சி மண்டல நிதி செயலாளர் ப.அப்துல்லா, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட செயலாளர் செல்வகுமார், சமூக நீதி கட்சி மாவட்ட செயலாளர் சுக.திருவளவன், புஇமு பாலு, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சக்தி வேல், டாக்டர் அம்பேத்கர் சட்ட ஆதார மையம் இரா.குருசாமி, மனிதநேய ஜனநாயக கட்சி இர்ஃபான், தமுமுக சலீம் பாபு, SDPI கட்சி சுனைல் ஷெரீப், கருஞ்சிறுத்தைகள் பேரவை முருகேசன், விடுதலை வேங்கைகள் கட்சி வேங்கை ராஜன் மற்றும் விசிக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சத்தியமங்கலம் நகர பொறுப்பாளர் சிறுத்தை சிவா நன்றியுரையாற்றினார். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment