வாரச்சந்தை வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகளை அகற்றியதால் நகராட்சி நிர்வாகம் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரி மா. கம்யூ கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோர் நேற்று புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட போராட்ட குழுவினர் பின்னர் கலைந்து சென்றனர்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் சையது உசேன் கூறியதாவது. நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த மாட்டு இறைச்சி கடைகளுக்கு நகராட்சியிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறவில்லை. மேலும் நகராட்சி வாரச்சந்தை பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை வாங்க வருவதால் மாட்டிறைச்சி கடைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் நகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் அகற்றப்பட்டது. வாரச்சந்தை வளாகத்தில் மாட்டிறைச்சி கடை நடத்த அனுமதி வழங்க சட்ட விதிகளில் இடமில்லை என தெரிவித்தார்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment