இம்மாதிரி கிராமத்தில் ஒற்றை சாளர அறிவு சார் தகவல் மையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இம்மையத்தின் மூலமாக இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மீன் வளத் துறை, கால் நடைத்துறை, நீர் வளத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்ந்த அலுவலர்கள் இக்கிராமத்தினை சேர்ந்த விவசாயிகளின் திட்டம் சார்ந்த சந்தேகங்கள், வேளாண் தொழில் நுட்பங்கள் மற்றும் வணிகப்படுத்துதல் தொடர்பான அனைத்து தேவைகளையும் அறிந்து அதனை நிறைவேற்ற உதவுவார்கள்.
இதற்காக இம்மையத்தில் மேற்கூறிய எட்டு துறைகளின் அலுவலர்களின் பெயர்கள் தொடர்பு எண்களோடு எழுதப்பட்டுள்ளது. அரக்கன்கோட்டையில் உருவாக்கப்பட்டுள்ள இம்மையத்தினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீர் நுட்ப மைய இயக்குநர் பழனிவேலன் திறந்து வைத்தார். ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி முன்னிலை வகித்தார்.
பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் வரவேற்றார். அனைத்து சார்பு துறை அலுவலர்களும் கலந்து கொண்டு அவர்கள் சார்ந்த துறைகள் செயல்படுத்தும் திட்டங்களை விளக்கியதோடு, விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
முடிவில் இணைப் பேராசிரியர் வாகேஸ்வரன் நன்றி கூறினார். டி.என்.பாளையம் வட்டாரம் அரக்கன் கோட்டையில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒற்றை சாளர அறிவு சார் மையம் திறப்பு விழா நடைபெற்றது.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment