திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காயம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 January 2023

திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காயம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
 

இந்த நிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த அலெக்ஸ் பால்ராஜ் (43) என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேருடன் காரில் ஈரோடு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். கார் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள  50 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  


கார் விபத்துக்குள்ளானதை கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கும், ஆம்புலன்சிற்க்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இதில் காரில் பயணித்தவர்களுக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அனைவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment