வார சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

வார சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் நகர தேர் வீதியில் கொரானா காலத்தில் வாரச்சந்தை கூடாததால் பொதுமக்களின் நலன் கருதி தினசரிகாய்கறி, பழக்கடைகள் தற்காலிகமாக தேர்வீதியில் சமூக இடைவெளியை பின்பற்றி வைத்துக்கொள்ள அனுமதியை பேரூராட்சி நிர்வாகம்  உத்தரவு வழங்கியது.

கொரானா பொதுமுடக்கம் முடிந்து பல வருடமாகியும் இப்பகுதியில் காலை முதல் இரவு வரை தேர் வீதியில் நடுரோட்டில் மார்கெட் கடைகள் வைத்திருப்பதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் குப்பைகளும் நிறைந்து காணப்படுகிறது. இவ்வழியே பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் கம்பெனி வேன்களும், பேருந்துகளும் செல்வதால் பொதுமக்களும் மாணவ, மாணவியர்களும் இவ்வழியே செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள் தற்போது வாரச்சந்தையும் செயல்பட்டு வருகிறது. 


தினமும் இவ்வழியே செல்லும் அந்தியூர் பேரூராட்சியினரும், போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதே இல்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள கடைகளை வேறுபகுதிக்கு மாற்றுமாறு அந்தியூர் பேரூராட்சிக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 


- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி. 

No comments:

Post a Comment