ஈரோடு மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் K.சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சூரம்பட்டி, கருங்கல்பாளையம், பெரியார் நகர் பகுதி, நிர்வாகிகளான, நாகராஜ், வீரப்பன், பெருமாள், ஈஸ்வரி, லட்சுமி, சுமதி, பூங்கொடி, சென்னியப்பன், ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் கலந்து கொண்டு நடைபெறுகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இந்துகுறவன் சமுதாயத்தை சார்ந்தவர்கள் சுமார் 4000- முதல் 7000- வரை வாக்காளர்கள் உள்ளனர்.
சமுதாய மக்களின் கோரிக்கைகள்.
- கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும்.
- தமிழகத்தின் முதல் குடி மூத்தகுடி பூர்வகுடி தமிழ் குறவர்களை, பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்த்திட தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுமார் 500- மேற்பட்ட தமிழ்குறவன் சமுதாய மக்கள் வாடகை வீட்டிலும், ஓடைப்பகுதியில் வாழ்கின்றனர். வாழ்வாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு அனைவருக்கும் ஒரே இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும்.
- எங்கள் தமிழ் குறவன் சமுதாய மக்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடை மோரம் பின்னுதல், சீமார் பின்னுதல் மற்றும் பல்வேறு சிறு தொழில் செய்கின்றனர்.
தமிழக அரசின் உதவியுடன் (தாட்கோ) கடனுதவி பெற்று கொடுத்து எங்களுடைய தமிழ் குறவன் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் அவர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்படும் என்று மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment