புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி.


ஈரோடு மொடக்குறிச்சி வட்டார வளமையம் சார்பில்  புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியை மொடக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

மேற்பார்வையாளர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு பேரணி மொடக்குறிச்சி கிராமத்தின் முக்கிய வீதிகள், பேருந்து நிறுத்தம், உள்ளிட்ட  பகுதிகளுக்கு 100 க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்களுடன் செல்லப்பட்டது. இப்பேரணியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment