அலட்சிய போக்கை கடைபிடிக்கும் மின்சாரத் துறை அதிகாரிகள். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

அலட்சிய போக்கை கடைபிடிக்கும் மின்சாரத் துறை அதிகாரிகள்.


ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் கோயில் பின்புறம் மாட வீதி தெருவில் உள்ள மின்கம்பங்களில்  இரவு நேரங்கள் மின்விளக்கு எரிவதில்லை. இதை மின்சாரத் துறை அதிகாரிகளுக்கும்  கொடுமுடி பேரூராட்சிக்கு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள்.

இரவு நேரங்களில் அப்பகுதிகளில் விஷ பூச்சிகள் மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால்  உடனடியாக தமிழக அரசு  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment