கருங்கல்பாளையத்தில் முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 February 2023

கருங்கல்பாளையத்தில் முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம்.


ஈரோடு கருங்கல்பாளையத்தில்  முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.


ஈரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி திரு திருமகன் ஈ.வே.ரா (M.L.A) உடல் நல குறைவால் காலமானார்,  அதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு   இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் களம் இறங்கி  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


இதை தொடர்ந்து சனிக்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் ஈரோடு கருங்கல்பாளையம் 38, 39, வார்டு பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு. இ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், இப்பிரச்சாரத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கழக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment