தேமுதிக ஒன்றிய, நகர , பேரூராட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் !!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 January 2023

தேமுதிக ஒன்றிய, நகர , பேரூராட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் !!!


தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர,  பேரூராட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சத்தி ஒன்றிய  செயலாளர் கே. என். சஜித் தலைமை தாங்கினார். 

சத்தி நகர  செயலாளர் எஸ். கே .ராஜேந்திரன், ஈரோடு வடக்கு மாவட்ட  துணை செயலாளர் எம். வாசுதேவன், மாவட்ட பொருளாளர் ஜீவா சுப்பிரமணியம், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.கே.தங்கவேல்,  நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் பொன்னுச்சாமி அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர் சுதாகர், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் சோமசுந்தரம், பெரிய கொடிவேரி பேரூர் கழக செயலாளர் பெருமாள், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் கந்தசாமி, கோபி நகர கழக செயலாளர் மணிகண்டன், அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் செங்கோட்டையன், பவானிசாகர் பேரூர் கழக செயலாளர் பாலன், அந்தியூர் பேரூர் கழக செயலாளர் முனாப் பாய்  ஆகியோர் முன்னிலை வைத்தார்.


இக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி .கே. சுப்பிரமணியன், மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் இக்கூட்டத்தில் சத்தி நகர பொருளாளர் ரெட்டி ஆறுமுகம், அமான் பாய், முன்னாள் நகர செயலாளர் கணேசன், சத்தி ஒன்றிய அவைத்தலைவர் எம்.கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் எம்.தங்கவேல், மாவட்ட பிரதிநிதி கடம்பூர் பொன்னுசாமி, கே.என்.பாளையம் ஈஸ்வரன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளார்கள். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment