பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிகழ்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 February 2023

பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிகழ்வு.


ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி, குடுமியம்பாளையம் பகுதியில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம் ஆகியோர் முன்னிலையில் தங்களை தேசிய நீரோட்டத்தில்  இணைத்துக் கொண்டனர்.


நடைபெற்ற நிகழ்விற்கு பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியம், குரு குணசேகர், கலை கலாச்சார பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் சரவணன், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், ஊடகப்பிரிவு செல்வம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். கட்சியில் இணைந்த நிகழ்வினை வெள்ளோடு சக்தி பாலு மற்றும் சிரஞ்சீவி அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment