ஈரோடு வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக பவானிசாகரை சேர்ந்த சந்திரசேகரன் நியமனம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 February 2023

ஈரோடு வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக பவானிசாகரை சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் பவானிசாகரைச் சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரனை ஈரோடு வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். 

இதையடுத்து மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சனை ஈரோடு வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சந்திரசேகரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சங்கர், பவானிசாகர் வட்டாரத் தலைவர் சுப்பிரமணி, பவானிசாகர் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகமையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


இதைத்தொடர்ந்து மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment