இதில் தமிழ்நாடு கர்நாடகா ராஜஸ்தான் ஹரியானா மத்திய பிரதேசம் பீகார் உட்பட 11 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து 45 பேர் கலந்துகொண்டு இதில் அகஸ்தியா தற்காப்பு கலை பயிற்சி மாணவமாணவிகள்24 பேர் கலந்து கொண்டனர். இப் போட்டியானது பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது
இப்போட்டியில் ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையம் அரசுப்பள்ளி நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டி மணிகாரன்பாளையம் அரசு மாதிரி பள்ளி கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் முதல் மற்றும் இரண்டாம் பரிசினை தட்டிச் சென்றனர். கராத்தே கட்டா பிரிவில் சிவானி ஜீவிகா குணஅரசி கௌதம் சுஜித் லீவின் ஸ்ரீனிவாசன் அபிஷேக் பிரசன்னா லோகேஸ்வரன் தீபக் நேத்ரா பிரபுசங்கர் ஆகியோர் முதல்பரிசினை பெற்றனர்.
கராத்தே சண்டை பிரிவில்பத்து சுற்றுக்களுக்கு மேலாக நடைபெற்றது, இதில் பட்டி மணியகாரன்பாளையம் அரசு மாதிரிமேல் நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் செ.இ. சஞ்சய் இரண்டாம் இடத்தை தட்டி சென்றார், மேலும்அதே பிரிவில் ஜஸ்வந்த் தியானேஷ் த்யானேஷ்வர் சூர்யா ஆகியோரும் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றனர்.
பைக்கா கராத்தே போட்டிக்குசிறப்பு பயிற்சியாளர்களாக அகஸ்தியா தற்காப்பு கலை பயிற்சி நிறுவனர் ரென்ஷி குணசேகரன் சென்சாய் சார்லி மற்றும் செம்பை மோகன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பைக்கா செயலாளர் கரம்வீர் கேல்வாட் மற்றும் சேர்மன் பவானி சிங் தேவாசி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment