ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள மிக பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கோயில் திருப்பணி வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது.
ஸ்ரீஐய்யனார் திருக்கோயில் ஆனது நம்பியூர் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதியான 20க்குமேற்பட்ட கிராமங்களில் காவல் தெய்வமாக விளங்குகிறது, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழாவனதுகொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில் நான்குகால பூஜையுடன்மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.
18.2.2023 - சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை முதல் கால அபிஷேகம் சிறப்பு தீபாரதனை அதைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
19.2.2023 - ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 1.30மணி முதல் 2.30 மணி வரை மூன்றாம் கால யாக பூஜை அபிஷேகம் சிறப்பு தீப ஆராதனை அதிகாலை நான்கு மணியிலிருந்து 5:45 வரை நான்காம் கால பூஜை உடன் அபிஷேகம் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். இவ்வாறு ஸ்ரீ ஐய்யனார் கோயில் தர்மகர்த்தா லோகு தெரிவித்தார். - தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment