புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 February 2023

புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் 2023-ஐ முன்னிட்டு, ஈரோடு கிழக்கு சட்ட மன்றத்தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இன்று (18.02.2023) புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்,கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள், தேர்தல் பொது பார்வையாளர் திரு.ராஜ்குமர் யாதவ் இஆப அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., தெரிவித்ததாவது, அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 2023 அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மொத்தமுள்ள, 238 வாக்கு சாவடிகளில் பயன்படுத்துவதற்காக, 286 வாக்குபதிவு இயந்திரங்கள் 286 கட்டுப்பாடு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியானதால் கூடுதலான ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்பட்டது. எனவே கூடுதலாக 1100 வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும், 5 வாக்குப்பதிவு இயந்திரம் (Ballet Unit) 1 கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் (Control Unit) பொருத்தப்பட உள்ளது. கூடுதல் இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி முடிந்தவுடன் கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.


மேலும் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலக வைப்பறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரது புகைப்படத்துடன் கூடிய பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் தொடர்பான வரும் புகார்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண்பார்வையார்கள், வெப்கேமரா மூலம் கண்காணிக்கவும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


இந்த நிகழ்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாநகராட்சி ஆணையர் திரு.க.சிவகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment