ஈரோட்டில் அனல் பறக்கும் உதயநிதிஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 February 2023

ஈரோட்டில் அனல் பறக்கும் உதயநிதிஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம்.


ஈரோட்டில் வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கின்றது, இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு.ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், அவர்களை ஆதரித்து திமுக கட்சியின் மாண்புமிகு அமைச்சர்களான, திரு.சு. முத்துசாமி, திரு.ஏ.வ.வேலு, திரு.செந்தில் பாலாஜி, திரு.தங்கம் தென்னரசு, திரு.சக்கரபாணி, திரு கே.என்.நேரு, திரு. சேகர்பாபு, திரு.நாசர், திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்னும் சில அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எம்.பிகள், என பலரும் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை ஈடுபடுகின்றன. 

இதைத் தொடர்ந்து கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர்,திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (20/02/2023 ,21/02/2023) ஈரோடு கிழக்கு தொகுதியான (எஸ்.கே.சி ரோடு, அண்ணா டெக்ஸ்மேடு, காமாட்சி காடு, கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோயில், கணபதி நகர், ராஜாஜி புரம், 50 பம்பிங் ஸ்டேஷன் ரோடு, காவிரி ரோடு கார்னர், அக்ரகாரம்,போன்ற இடங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்,திரு.ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் அவர்களே ஆதரித்து தீவிர அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார். 

No comments:

Post a Comment