மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் கலந்து கொண்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மொடக்குறிச்சி ஒன்றிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 February 2023

மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் கலந்து கொண்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மொடக்குறிச்சி ஒன்றிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா.


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில், கலைத்திருவிழா போட்டிகளில் பங்கு பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று 'கலையரசி' பட்டம் வென்ற  சிந்துஜா மாணவிக்கு பாராட்டு விழாவும், வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா  நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி) திருமதி. ஜோதிச்சந்திரா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட உதவிதிட்ட அலுவலர் திரு. ரவிச்சந்திரன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் வனிதாராணி, சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.  பாலகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பரிசினைப் பெற்றுக் கொண்டனர். விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி சுதா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment