குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக அமைச்சர் கீதா ஜீவன் அவர்களிடம் கோரிக்கை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 February 2023

குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக அமைச்சர் கீதா ஜீவன் அவர்களிடம் கோரிக்கை.


மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு சட்டமன்ற தொகுதி கிழக்கு தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்த  திராவிட முன்னேற்றக் கழக  தூத்துக்குடி மாவட்ட செயலாளர், தமிழ்நாடு நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  பெ. கீதா ஜீவன் அவர்களை குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் தலைமையில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநகர பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

பின்பு அமைச்சர் அவர்களிடம் தமிழக பூர்வகுடி தமிழ் குறவர்களின் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மூன்று அம்ச கோரிக்கையை  தெளிவாக அவர்களிடம் தெரிவித்தும் தமிழக சட்டமன்றத்திலும், திமுக கட்சியின் சார்பாக நிறைவேற்ற சொல்லியும், மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment