ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவை தலைவர் தமிழ் மகன் உசேனின் பரிந்துரைப்படி கே எஸ் தென்னரசு அங்கீகரிக்கப்பட்ட அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்களின் கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேவி ராமலிங்கம் நிர்வாகிகள் மனோகரன் பாவை அருணாச்சலம் மற்றும் தாமாக இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோர் மனு தாக்கலில் உடனிருந்தனர். தென்னரசுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி பத்மினி தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் போது பாஜக நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் கூட்டணிக் கட்சியான தாமாக யுவராஜ் மட்டும் வேட்பு மனு தாக்கலின் போது உடனிருந்தார். அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கலின் போது கூட்டணி கட்சியான பாஜக புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment