வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வி.சி.குமார் இவர் நம்பியூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆவார். கடந்த 04.10.22 வருடம் அவரது தந்தை காலமாகிவிட்டார். அதன் பதிவை எம்மாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து தந்தை இறப்பு சான்றிதழை கொண்டு வாரிசு சான்று வாங்க எம்மாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணனிடம் தனது ஆன்லைன் மனுவை கொடுத்துள்ளார். அங்கே இருந்த கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆன்லைன் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுங்கள் எனவும் வாரிசு சான்றிதழ் வேண்டுமென்றால் ரூபாய் 5 ஆயிரம் பணம் செலவாகும் எனவும் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து புகார் மனு ஒன்றை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வி.சி. குமார் நம்பியூர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் உள்ளிட்டவர்களுக்கு புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவில் கிராம நிர்வாக அலுவலர் 5 ஆயிரம் பணம் எனக்கு மட்டுமல்ல எனது மேல் அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டும் எனவும் வாக்குவாதம் ஏற்பட்டு என்னை மிகவும் ஏளனமாக பேசி அவமானப்படுத்தி விட்டார் எனவும் எனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் எனக்கு வாரிசு சான்று வழங்க வேண்டும் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று எம்மாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் சுற்றுவட்டார பொதுமக்களை இழிவக நடத்தி வருவதாக நம்பியூர் வருவாய் வட்டாட்சியருக்கு ஏற்கனவே புகார்கள் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நம்பியூர்வருவாய் அலுவலகம் முன்பு புகார் மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த வி.சி.குமாரை படத்தில் காணலாம்
No comments:
Post a Comment