அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அனைத்து சோதனை ஓட்டங்களும் 15 நாட்களுக்குள் நிறைவுபெறும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவடைந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தத் திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சோதனை முறையாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி.
No comments:
Post a Comment