லாரி மோதியதில் முதியவர் பலி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 March 2023

லாரி மோதியதில் முதியவர் பலி.


ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 60). இவர், நேற்று இரவு சுமார் 7 மணியளவில்  ஆப்பக்கூடல் நால்ரோட்டில் நடந்து சென்ற போது,  அப்போது, சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து அவரது மனைவி சின்னகண்ணாள் அளித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார்  வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாலகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment