மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிக்கு பூமி பூஜை செய்தல் நிகழ்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிக்கு பூமி பூஜை செய்தல் நிகழ்வு.


ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை பேரூராட்சி வார்டு எண். 15, பள்ளியூத்து - மண்கரடு சாலை, கலிமடையில் தார் சாலை மற்றும் வடிகால் அமைக்கவும்,  அரச்சலூர் பேரூராட்சி வார்டு எண்.6,  குள்ளரங்கம் பாளையம் பகுதியில் உள்ள மண் சாலையை தார் சாலையாக அமைத்திடவும்,  சிவகிரி பேரூராட்சி, வார்டு எண்.2, கோட்டை புதூரில் கான்கிரீட் சாலை மற்றும் குமாரவலசில் குடிநீர் தொட்டி, பைப் லைன் அமைத்திடவும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் (2022-2023) இருந்து சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை  அந்தந்த பகுதியில் நடைபெற்றது.

நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு தார் சாலை, கான்கிரீட் சாலை, குடிநீர் தொட்டி மற்றும் பைப் லைன் அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment