ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பாறை காட்டுப்புதூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், சென்னி மலையில் இருந்து ஊத்துக்குளி சாலையை இணைக்கும் பாறைக்காட்டு புதூர், பனப்பாளையம் பகுதியை இணைக்கும் சாலையில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி வாகனங்களும் கிராமப்புற பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர்.. மண் சாலையாக இருந்த பாதையை ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் கடந்த 1997 இல் தார் சாலையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் திடீரென எந்த அனுமதியும் இன்றி சில தனி நபர்கள் சாலையை மண்ணை கொட்டி மூடி விட்டு கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்து வருகின்றனர், இதை தடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கேள்வி எழுப்பு கையில் அப்படித்தான் ஆக்கிரமிப்போம் என மிரட்டல் விடுகின்றனர்.
40 ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த சாலையை ஆட்சித் தலைவர் நடவடிக்கையின் பேரில் மீட்டு சாலையை ஆக்கிரமிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சித் தலைவர் கிருஷ்ணன் உண்ணியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment