குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 April 2023

குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம்.


குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை PK.ரவி  இல்லத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் MN. சந்திரன்  தலைமையில் நடைபெற்றது.

மாநில துணைத்தலைவர் T.சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். ஈரோடு மாநகர மாவட்டம், கிழக்கு மாவட்டம், ஈரோடு மாநகரம், கோவை மாவட்டம் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் :1

"குறவன்- குறத்தி"- என்ற பெயரில்  நடந்து வந்த ஆபாச நடனத்துக்கு தடை செய்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக நன்றிகளைத் தெரிவித்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தல் என்று முடிவு செய்யப்பட்டது



தீர்மானம்:2

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ் குறிஞ்சி நிலத் தோன்றலான "குறவன்"- சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் (ST) சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இன்று வரை நிறைவேறாமல் நிலுவையில் இருப்பதற்கு காரணமான கோப்புகளை சீர் செய்து ஒன்றிய அரசுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிந்துரைக்குமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


தீர்மானம் :3

வருகின்ற ஜூன் மாதத்தில் மாநில பொது குழு கூட்டம் நடத்தல் என்று தீர்மானம் செய்யப்பட்டது 

No comments:

Post a Comment