ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கொடுமுடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 April 2023

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கொடுமுடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.


ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு இளம் தலைவர் ராகுல் காந்தி  மீது பொய் வழக்கை போட்டு  இரண்டு ஆண்டு தண்டனையும் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நீக்கியதை கண்டித்து மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் கொடுமுடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் இதை கண்டித்து பாரத பிரதமர் க்கு கடிதம் அனுப்பும் போராட்டமும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், கொடுமுடி கிழக்கு வட்டாரத் தலைவர் கோபாலகிருஷ்ணன், கொடுமுடி மேற்கு முருகேஷ், மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி, மொடக்குறிச்சி வடக்கு ரவி, மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் தில்லை சிவக்குமார் மூத்த தலைவர் சோமசுந்தரம் மணி குண்டலம் பரமசிவம் பொதுச்செயலாளர் வாசுதேவன் மணி கிருஷ்ணா தங்கவேல் பாபு சுகுமார் செந்தமிழ்ச்செல்வன் கொடுமுடி பேரூராட்சி உறுப்பினர் தம்பி என்கின்ற முனிராஜ் சிபிராஜ் சதீஷ் கௌதமன் கொல்லங்கோவில் பேரூர் தலைவர் சக்திவேல் கவுன்சிலர் பிரதாபன் காரணம்பாளையம் சுரேஷ் கமிஷன் ரோசாப்பூ பெரியசாமி மகிலா காங்கிரஸ் லட்சுமி ராஜசேகர் கவுன்சிலர் சேனாதிபதி முருகேசன் குமாரசாமி தேவராஜன் குணசேகர் கௌதமன் உள்ளிட்ட பெரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடியை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன தொடர்ந்து கொடுமுடி தபால் நிலையம் சென்று அங்கு பாரத பிரதமர் மோடி க்கு கடிதம் அனுப்பும் நிகழ்வும் நடைபெற்றது முடிவில் அனைவருக்கும் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாபு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment