மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 April 2023

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணானுண்ணி இஆப அவர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்.


ஈரோடு மாநகராட்சி, சென்டல் தியேட்டர் பனியன் குடேன், சௌத் இந்தியன் வங்கி அருகில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப அவர்கள் இன்று (18.04.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இப்பேரணியானது சௌத் இந்தியன் வங்கி அருகில் துவங்கி, கால்நடை மருத்துவமனை சாலை வழியான ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இப்பேரணியில் நந்தா, ஜேகேகே இயன்முறை கல்லூரியைச் சேர்ந்த 350 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்போம், மதுவை நிறுத்து, மரணத்தை விரட்டு, போதையில் தள்ளாட்டம், வாழ்க்கையில் திண்டாட்டம், மானத்தோடு வாழ மதுவை மறப்போம், கள்ளச்சாராயம் அருந்துவது உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைளை ஏந்திச்சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


இப்பேரணியில், உதவி ஆணையர் (கலால்) திரு.சிவகுமரன், கோட்டக் கலால் அலுவலர் திரு.குமரேசன், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் திரு.பாலசுப்பிரமணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) திருமதி.பவித்ரா, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலமுருகன் உட்பட நந்தா, ஜேகேகே. இயன்முறை கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment