அதன் பின்னய் ரெஜினா தனியாகவும், கணவர் ஸ்ரீகுமார் தனது மூன்று குழந்தைகளுடன் மின்வாரியத்தில் பணிபுரியும் பெண் ஒருவருடன் வாழந்து வருகின்றார். இதனிடயே வங்கி கடன் மூலமாக, மனைவி ரெஜிதா பெயரில், வாங்கிய வீட்டிற்கு சுமார் 18 லட்சம் ரூபாய் பணம் செலுத்தாத நிலையில், வீட்டை ஜப்தி செய்ய போவதாக வங்கி தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரெஜிதா, அவருக்கு தெரிந்த நண்பரான விஜயகுமார் என்பவருக்கு 81 லட்சம் ரூபாய்கள் வீட்டை விற்பனை செய்து, அந்த பணத்தின் மூலம் வங்கி கடனை அடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீகுமார், தனது மூன்று குழந்தைகள் மற்றும் மின்வாரிய ஊழியர் பெண் ஆகியோருடன், சம்பந்த வீட்டில் குடியேறி, வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, நீதிமன்றத்திலும் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்த ரெஜினா, வீட்டை வாங்கிய விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டை காலி செய்யக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீட்டின் கதவை உடைத்து உள்ள சென்ற அவர்கள், ஸ்ரீகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கருங்கல்பாளையம் காவல்நிலைய போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனை காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment