பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட இளைஞர் அணியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் விவேக் ராஜ், இவரின் தந்தை முருகேஷ் இருதய கோளாறு காரணமாக இரு வாரங்களுக்கு முன்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
தொடர்ந்து அவரது இல்லத்தில் ஓய்வு பெற்று வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் தொலைபேசி வாயிலாக அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தமிழக தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் முருகேசை ஈரோடு சோலாரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஈரோடு வந்த மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இளைஞர் அணி தலைவரின் இல்லத்திற்கு சென்று அவரது த தந்தையை சந்தித்து நலம் விசாரித்து சென்றது பாரதிய ஜனதா கட்சியின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment