தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி நேற்று மாலை 6 மணி அளவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியிலும், கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியிலும், மணிக்கு மரப்பாலம், அண்ணா டெக்ஸ் மேடு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
பவானிசாலையில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் 80சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது, திமுக அரசு இன்னும் வரும் காலங்களில் விரைவில்100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் மக்களைத் தேடி மருத்துவம் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிக்க மாதம் 1000/- ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் மழலையர்க்கு கட்டணமில்லா பேருந்து இந்த இரண்டு வருடங்களில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பெரும் அளவில் உதவியாக இருந்து வருகிறது மகளிர் உதவித்தொகை மாதம் 1000/-ரூபாய் வழங்கும் திட்டம் வரும் அறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது மிஸாவையே சந்தித்த இயக்கம் திமுக.எங்களுக்கு ஐடி ரைட் எல்லாம் எம்மாத்திரம், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் பரபரப்பாக பேசினார், முன்னதாக ஈரோடு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment