சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா ஈரோடு கொல்லம்பாளையம் மைதானத்தில் ஆற்றல் பவுண்டேஷன் மூலம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 April 2023

சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா ஈரோடு கொல்லம்பாளையம் மைதானத்தில் ஆற்றல் பவுண்டேஷன் மூலம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள  சமூக ஆர்வலர்களுக்கு  பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா  ஈரோடு கொல்லம்பாளையம் மைதானத்தில் ஆற்றல் பவுண்டேஷன் மூலம் நடைபெற்றது.

இதில் வித்யாசாகர்  பல  இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி  ஏழை, எளிய மக்களுக்கு  கண்ணொளி கிடைத்திட  உதவிகரமாக இருந்தமைக்காக  சிறந்த சமூக சேவகர் விருது கிடைத்தது. இவர் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள கிராமங்களில் வாரத்தில் ஐந்து நாட்கள் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்.

இந்த விருதினை ஆற்றல் பவுண்டேஷனின் நிறுவனர்  மதிப்புக்குரிய ஆற்றல் அசோக்குமார் வழங்கினார்கள், மேலும் சிறந்த சமூக சேவை செய்த  திருநங்கைகளுக்கும், ஈரோடு மாவட்ட சமூக சேவகர்களுக்கும் ஆற்றல் பவுண்டேஷன் மூலம் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment