ஈரோடு அடுத்த குமலன்குட்டை நியாய விலை கடையில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திடீர் ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 April 2023

ஈரோடு அடுத்த குமலன்குட்டை நியாய விலை கடையில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திடீர் ஆய்வு.


ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி  நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி  இரு மாதங்களுக்கு ஒரு முறை ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்  முக்கிய பொறுப்பாளர்களை சந்தித்தும்,  வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று ஈரோடு வருகை புரிந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு முன்னாள் மாநில தலைவர் சரவணன் என்பவரை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்பு ஈரோடு குமலன்குட்டையில் உள்ள  நியாய விலை கடைக்கு சென்ற அமைச்சர் கிஷன் ரெட்டி  மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ரேஷன் அரிசி, கோதுமை, பாமாயில் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா என்றும் பொருட்களின் தரம் குறித்தும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தி விளக்கம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.


நிகழ்வின் போது மொடக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் வேதானந்தம், ஈரோடு பாராளுமன்ற குழு தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் இந்த சோதனையின் போது மத்திய அமைச்சருடன் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment