ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கோலகாலமாக நடைபெற்ற ரமலான் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 April 2023

ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கோலகாலமாக நடைபெற்ற ரமலான் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 37வது வார்டு ஜானகி அம்மாள் லே-அவுட் கிளை சார்பாக நடைபெற்ற  ரமலான் விளையாட்டுப் போட்டிகள் மற்றும்  பரிசளிப்பு விழா எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை நடைபெற்றது. கிளை பொருளாளர் சையது முஸ்தபா வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா, தி.மு.க கோட்டை பகுதி செயலாளர் பொ.ராமச்சந்திரன், தாருல் உலூம் சித்திக்கியா மதரஸா மற்றும் மஸ்ஜித் தலைவர் ஹாஜி K.A.ஷமீம், செயலாளர் ஹாஜி N.ஹைதர் அலி, பொருளாளர் L.சையது முஸ்தபா, மதரஸா பொறுப்பாளர் ஜெய்னுலாப்தீன், தி.மு.க 37 வது வார்டு செயலாளர் பூபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


காலை முதல் மாலை வரை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக கிளை பொருளாளர் S.சையது முஸ்தபா நன்றியுரை ஆற்றனர்.

No comments:

Post a Comment