மலைக்கோயில் செல்லும் வழியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 11 May 2023

மலைக்கோயில் செல்லும் வழியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்!!!


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவியார்பாளையம் மலைக்கோயில் செல்லும் செல்லும் தார் சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டுவந்தனர்., இது சம்மந்தமாக பொதுமக்கள் கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில், உரிய நடவடிக்கை மேற்கொண்டு 15-வது நிதிக்குழு மான்யம் 2022-2023 நிதியில் ரூபாய் 7.60 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம் எல் ஏ துவக்கி வைத்தார். 

பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம் ஜி ஆர் மன்ற செயலாளர் அ. பண்ணாரி எம் எல் ஏ., முன்னிலை வகித்தார். உடன் கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்   எஸ்.எம்.சரவணன் ,  ஒன்றிய கழகச் செயலாளர்கள்  சி.என்..மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி, என்.என்.சிவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி. பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யாபழனிசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர், இளங்கோ, வார்டு உறுப்பினர்கள், கிருஷ்ணமூர்த்தி,வடிவேலு, சுரேஷ், சுப்ரமணியம், ரங்கராஜ், வளர்ச்சிக்ககுழு உறுப்பினர் ராசு, கிளை செயலாளர்கள் எஸ்.பி. சிவக்குமார், தங்கராஜ்,  மற்றும் ஊர்கவுண்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.தங்கவேலு, சரவணராஜ், காளியப்பன், நடராஜ், மூர்த்தி, மகேஷ்வரி, மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592 

No comments:

Post a Comment