ஆலைக் கழிவுகள் பவானி நதியில் கலப்பதை தடுக்கக்கோரி அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் சார்பில் மனு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 11 May 2023

ஆலைக் கழிவுகள் பவானி நதியில் கலப்பதை தடுக்கக்கோரி அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் சார்பில் மனு.


ஈரோடு மாவட்ட மக்களின் உயிர் ஆதாரமாக விளங்கி வரும் பவானி நதியின் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தருவதோடு மக்களின் குடிநீர் சேவையையும் பூர்த்தி செய்கிறது. பவானி நதியில் ஆலைக்கழிவுகள் நேரடியாக கொட்டப்படுவதால்  மீன்கள் அவ்வப்போது செத்து மிதக்கின்றன.

சமீபத்தில் ஈரோட்டிற்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறும்போது தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மூன்று மாவட்டங்களில் ஈரோடும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். ஆகவே கரையோர கிராமங்களில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளை பற்றிய ஆய்வினை மேற்கொண்டு காரணங்களை கண்டறிந்து உரிய நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆற்றில் ஆலை கழிவுகள் நேரடியாக கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் எனவும், ஆற்று நீரை பரிசோதித்து அதில் கலந்துள்ள இரசாயனங்களை பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், பவானி நதிக்கரை ஓரத்தில் இயங்கும் ஆலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதையும் சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்கத்தையும் கண்காணிக்கவும் மாசு கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் வருவாய் துறை அலுவலர்கள் பொதுமக்கள் தரப்பு பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட கண்காணிப்பு குழுஅமைத்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி  பவானிசாகரில் அமைந்துள்ள நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளரிடம் அரசியல் அமைப்புகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் திரண்டு மனு அளித்தனர்.

அடுத்த கட்டமாக ஜுன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் மக்களை பெருந்திரளாகத் திரட்டி போராடாவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி பவானிசாகர் வட்டார தலைவர்  சுப்பிரமணியம், சிபிஐ எம்  திருத்தணிகாசலம், சிபிஐ  மாவட்ட செயலாளர் மோகன் குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் முத்துசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பொன் தம்பிராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, பவானி நீரேற்று சங்க செயலாளர் சின்னராஜ், வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கிடுசாமி, வணிகர் சங்க தலைவர் ஜவஹர், சமூக ஆர்வலர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், ஸ்டாலின் சிவகுமார், போராட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471, 6382211592

No comments:

Post a Comment