இவ்விழாவில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் பின்பற்றுகின்ற வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வத்றகாக அதிகப்படியாள நிதியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அவற்றில் கடந்த, 18 மாதத்தில் மட்டும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சுமார் 22,000/- கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 38 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.12,531/- கோடியிலும் மற்றும் பாதாள் சாக்கடை திட்டப்பணிகளுக்காக ரூ.9577.53 கோடியிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வடிகால் வாரியம் இல்லாமல் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு ரூ.24,000/- கோடி வழங்கியுள்ளார்கள். அவற்றில் 16,000/- கோடியில் சாலை வசதி, சாக்கடை வசதி, கழிவறை வசதி, மழைநீர் வடிகால் வாரியம், புதிய கட்டிடங்கள், நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டு வழங்கியுள்ளார்கள்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரையின்படி, மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் தேவைகளை கேட்டறிந்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஜீவநதியான கொடிவேரி அணையிலிருந்து தற்போது பெருந்துறைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும், ஈரோட்டிற்கும் கொடிவேரி அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கும் துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் ஈரோடு மாவட்ட அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களின் கோரிக்கைகளும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இவ்விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்,சு.முத்துசாமி அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளிலும் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் எண்ணற்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.15.69 கோடி மதிப்பீட்டில் 55 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டப்பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வருகின்ற 20 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை வரக்கூடாது என்ற வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்காக 2 பெரிய பேருந்து நிலையங்களும் மற்றும் ரூ. 1000 கோடியில் திட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். மேலும், ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரையில் சுமார் 85 திட்டங்களை வழங்கி உள்ளார்கள். அத்திட்டங்களில் பெரும்பாளான திட்டங்கள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகளுக்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து தர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்,கே.என்.நேரு அவர்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஆகியோர் பவானி ஊராட்சி ஒன்றியம், கவுந்தப்பாடி ஊராட்சி பொம்மன்பட்டியில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சி மூலம், ரூ.47.69 இலட்சம் மதிப்பீட்டில், 119 தனி நபர் இல்ல குடிநீர் இணைப்புகளை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வின்போது, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.நாரணவ்வே மனிஷ் சங்கர்ராவ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் (கோவை) அ.செந்தில்குமார், மேற்பார்வை பொறியாளர் து.தங்கரத்தினம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (பெருந்துறை) நிர்வாகப் பொறியாளர் இரா.மணிவண்ணன், உதவி நிர்வாக பொறியாளர்கள் கிருஷ்ணன், குருதேவி, உதவி பொறியாளர்கள் சௌந்தர்யா, திருநாவுக்கரசு, பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை, கவுந்தப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பாவா.கே.பி.தங்கமணி, நகராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment