கடம்பூர் மலைப்பகுதியில் பகலில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையால் மலை கிராம மக்கள் அச்சம் !! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 12 May 2023

கடம்பூர் மலைப்பகுதியில் பகலில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையால் மலை கிராம மக்கள் அச்சம் !!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலை கிராமங்களில் மக்காச்சோளம், கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை மலை கிராம விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்பாக உள்ளது.  

காலை வனப் பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பூதிக்காடு கிராமத்திற்குள் நுழைந்தது. அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்துவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கிராம மக்கள் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட முயற்சித்தபோது யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய நிலங்களில் நடமாடியது. 


இதனால் அப்பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் பகல் நேரத்தில் தங்களது விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பகல் நேரத்தில் விவசாய விளை நிலங்களில் நடமாடும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 99651 62471, 63822 11592.

No comments:

Post a Comment