தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை போராட்டம் நடைபெற்றது.... இப் போராட்டம் குறித்த அவர்கள் கூறியதாவது கிராம உதவியாளர்களுக்கு (டி) பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவது போல ரூபாய் 7000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்றும், ஓய்வு பெரும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ரூபாய்7850/- வழங்க வேண்டும் என்றும், கிராம உதவியாளர்கள் விஏஓ, ஓ ஏ, பதவி உயர்வு முறையை 20% 10% சதவீதம் என்று விகிதாசரத்தை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், கிராம உதவியாளர் என்ற பெயரை துணை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்திட வேண்டும் போன்ற மொத்தம் 21 தீர்மானங்களை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், வி.கண்ணன் (வட்டத்தலைவர்) தலைமை வகித்தார், கீதா மற்றும் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை, எம். மணிகண்டன் (வட்ட செயலாளர்) வரவேற்பு உரையாற்றினார், ஆர்.நடராஜன் (மாவட்ட செயலாளர்) கருத்துரையாற்றினார், சதீஷ்குமார் (முன்னாள் வட்ட செயலாளர்) வாழ்த்துரை மற்றும் சீனிவாசன் (வட்ட பொருளாளர்) நன்றி உரையாற்றினார்.
No comments:
Post a Comment