இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் ஐயா கணேசமூர்த்தி, அக்னி ஸ்டில்ஸ் நிறுவனர் ஐயா சின்னச்சாமி ,லோட்டஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஐயா பெரியசாமி ஆகியோர்கள் பொதுமக்கள் பார்வைக்கு கூட்ட அரங்கை திறந்து வைத்தனர். அரங்கை திறந்து வைத்து ஜாய் ஆஃப் கிவ்விங் நிகழ்வின் மூலமாக பொதுமக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் கிடைக்கவிருக்கும் நன்மைகளை எடுத்துரைத்தனர்.
இந்த கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஒளிரும் ஈரோடு அமைப்பின் யூ ஆர் சி நிறுவனத்தின் நிறுவனர் திரு.தேவராஜன் அக்னி ஸ்டீல் ஐயா தங்கவேலு சாரல் அமைப்பின் நிறுவனர் ஐயா கணேசன், சண்முகா சால்ட் ஐயா ராஜமாணிக்கம் எம் சி ஆர் டெக்ஸ்டைல்ஸ் ஐயா ராபின், கே. கே. பாலுசாமி கே.கே.பி & கோ, திரு. அருன் குமார், ஆர் பி பி நிறுவனர் ஐயா செல்வசுந்தரம் வென்புரோ பாலிமர் நிறுவனர் திரு.வெங்கடேசன், இதயம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்கிருஷ்ணன் சுவாமிநாதன் ஈரோடு பி.என்.ஐ அமைப்பின் மேனேஜ்மென்ட் கமிட்டி உறுப்பினர்கள் திரு ஆகாரம் இளங்கோவன் திருகேசி செந்தில்குமார் திரு சரவணஅருன் குமார் திரு ஆர் கே கிருஷ்ணமூர்த்தி எஸ் ஆர் குரூப்ஸ் திரு. கே. மகாலிங்கம் ஆகியோர்களும் வெல்ஃபேர் பவுண்டேஷன் ஃபார் த நீடி திரு. கிருஷ்ணன் மற்றும் எண்ணற்ற பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த கூட்டத்தில் பி.என்.ஐ. ஈரோடு மண்டல நிறுவனத்தின் செயல் இயக்குனர்கள் திரு.ராஜசேகர் பெரியசாமி, திரு. மகேஷ் பி. வி. கிரி ஆகியோர்கள் பேசும்போது கூறியதாவது:- மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து உதவுவது என்பது உலகில் மாற்றத்தைஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த செயலாகும். முதியோர் இல்லாம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், கல்விப்பணி, மருத்துவ சேவை, பெண்கள் நல அமைப்பு, சமூக நல பாதுகாப்பு, மரங்களை பேணிக்காக்கும் அமைப்புகள், மக்களிடையே ஏழ்மைய போக்க வழி செய்யும் அமைப்புகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் நிறுவனங்கள் போன்ற பலதரப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து 180- க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் மூலமாக அவர்களுடைய சேவைகளை பிஎன்ஐ ஜாய் ஆஃப் கிவ்விங் நிகழ்வின் மூலமாக இன்று பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளோம்.
இது முற்றிலும் சமுதாய அக்கறை கொண்டு நடத்தப்பெறும் ஒரு கண்காட்சி ஆகும்.தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்ய விருப்பப்படும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் தாங்கள் கொடுக்க நினைக்கும் பொருள் உதவி மற்றும் வேறு வகையான உதவிகள் என அனைத்தையும் சம்பந்தப்பட்ட அந்தந்த தொண்டு நிறுவனங்களுக்கு தாங்களே நேரடியாக கொடுத்து மகிழலாம். இதன் மூலமாக இனி வரும் காலங்களில் இன்னும் மேம்பட்ட சேவையினை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கவும் இந்த கண்காட்சி பெரிதும் உதவும் என்பதை இந்த சந்திப்பின் வாயிலாக அவர்கள் கூறினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பி.என்.ஐ. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் உமா சங்கர், சிறகுகள் விமல் கருப்பண்ணன், ஆகாரம் இளங்கோவன், கே.எஸ்.சி பள்ளிதாளாளர் திரு செந்தூரன், கட்டிட பொறியாளர் திரு அறிவுடைநம்பி, எஸ் ஆர் குரூப்ஸ் திரு. கே. மகாலிங்கம், திரு. ஜோசப்,துளிர்கள் கார்த்தி ஆகியோர் செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment