சத்தியமங்கலத்தில், சுயமாக படித்து பள்ளி இறுதி தேர்வை வென்ற மாற்று திறனாளி மாணவி- ஊராட்சி மன்றத் தலைவர் வாழ்த்து. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 May 2023

சத்தியமங்கலத்தில், சுயமாக படித்து பள்ளி இறுதி தேர்வை வென்ற மாற்று திறனாளி மாணவி- ஊராட்சி மன்றத் தலைவர் வாழ்த்து.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ,  கொமாரபாளையம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த, தங்கராஜ் கூலி  தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராதா என்கிற மனைவியும், ரம்யா, நதியா என்கிற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்தமகள் ரம்யாவிற்கு 15 வயதான நிலையில், இவர் சத்தியமங்கலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாற்றுத் திறனாளியான இவர், பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு ஆஸ்டியோ ஜெனெசிஸ் (எலும்புச் சிதைவு நோய்) உள்ளது. இதன் காரணமாக இவர் பள்ளி சென்று வர இயலாமல் இருந்தது. தளர்த்தப் பட்ட அரசு விதிகளின்படி, இதனால் வீட்டிலிருந்தே படித்து வந்து உள்ளார்.


சமீபத்தில் நடை பெற்ற 2022-23 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இவர் தனது தங்கை நதியா வழி காட்டுதலில், தன்னிச்சையாக தேர்வு எழுதி, 335/500 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை அறிந்த, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன்  மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வடிவேலு, விக்னேஷ்வரி,  சுப்பிரமணியம், ஊராட்சி செயலர் குமார் ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு சென்று, மாணவி ரம்யாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சால்வை அணி வித்து,  பாராட்டு தெரிவித்ததுடன், தனது சொந்த செலவில்  மேற்படிப்பு செல்ல, நிதி உதவி அளித்து பாராட்டினர். 


மேலும் இந்த மாணவிக்கு உறுதுணையாக இருந்த, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசி ரியர் ஆகியோர்  மாணவியை இல்லத்தில் நேரில் சந்தித்து, இனிப்பு வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக  ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592 

No comments:

Post a Comment