ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துமாறு திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி புஞ்சைபுளியம்பட்டி நகர திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திரு விக திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளரும், நகராட்சி துணைத்தலைவருமான பி.ஏ.சிதம்பரம் தலைமை தாங்கினார்.
அவைத் தலைவர் சாகுல் ஹமீது வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஜெயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ஈஸ்வரமூர்த்தி, ராஜேந்திரன், நகர துணை செயலாளர் முருகேசன் (எ) சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கரூர் கண்ணதாசன் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார். முடிவில் நகர துணை செயலாளரும், நகராட்சி தலைவருமான ஜனார்த்தனன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592
No comments:
Post a Comment