சிவகிரி பேரூராட்சியில் திமுக தலைவரின் ஆணவ போக்கை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

சிவகிரி பேரூராட்சியில் திமுக தலைவரின் ஆணவ போக்கை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.


சிவகிரி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற  கூட்டம்  நடைபெற்றது, சென்ற ஏப்ரல் மாத கூட்டத்திலேயே தீர்மானங்கள் நிறைவேற்ற கவுன்சிலர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை அதையும் மீறி பேரூராட்சித் தலைவர் தன்னிச்சையான செயல்பாடுகளால் இதுவரை சிவகிரி பேரூராட்சியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்படாததை கண்டித்தும் மன்றத்தின் செலவு சீட்டுகளை கூட்ட விவாத அஜெண்டாவில் சேர்க்காமல் மறைக்கப்பட்டதாலும் அரசிடமிருந்து வரப்பட்ட கடிதங்களை கவுன்சிலர்களின் பார்வைக்கு தெரியப்படுத்தாமலும் தலைவர் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.



தவறுகளை சுட்டிக் காட்டும் கவுன்சிலர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு வார்டு பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர் பின்னர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கவுன்சிலருடைய எதிர்ப்பை மன்றத் தீர்மான புத்தகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.


இதில் திமுக கவுன்சிலர்கள் 7 பேர் அஇஅதிமுக 1 பாரதிய ஜனதா கட்சி 1 சுயேட்சை 1 மொத்தம் 10 கவுன்சிலர்கள் அனைத்து தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து  செயல் அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளனர், பத்துக்கு மேற்பட்ட கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment