ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்ட நல்லூர் ஊராட்சியில் நேருநகர், பண்ணாடிபுதூர், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள முதியவர்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு மாத ஓய்வூதியம் பெறுவதற்கான அரசு ஆணையினை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி பயனாளிகள் மாரியம்மாள், மரகதம், பாண்டியன், ஜெயமால், தங்கராஜ், சரஸ்வம்மாள், துளசியம்மாள், பழனியம்மாள் ஆகியோருக்கு வழங்கினார்.


நிகழ்வின்போது நல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் என்.துரை, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.கோபால், வார்டு பிரதிநிதி புல்லட் சம்பத், சத்தி நகர அம்மா பேரவை இணை செயலாளர் எஸ். டி.காமேஷ் ஆகியோர் நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment