ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி வடக்கு ஒன்றியம் P.மேட்டுப்பாளையம் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் காலனியில் தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் கோபி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரவீந்திரன் தலைமையில் பேரூர் கழகச் செயலாளர் குமாரசாமி முன்னிலையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமை கழக பேச்சாளர்கள் திருப்பூர் கூத்தரசன் மற்றும் உடுமலை தண்டபாணி ஆகியோர் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கூறி சிறப்புரையாற்றினார்கள்.
உடன் ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராமசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் பிரவீன், மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment