சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரம்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் , சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சதுமுகை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ. தேவராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். மாநில விவசாய அணி இணைச் செயலாளர் தர்மலிங்கம், அவைத் தலைவர் சேகர், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசிபி இளங்கோ, ஒன்றிய துணை செயலாளர்கள் சுப்பிரமணியன், பெரியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ் குமார், ஆறுச்சாமி, செல்வராஜ், கே.என். பாளையம் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, திருமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பற்குணன், பக்தவச்சலம், மோகன் குமார், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் கழக துணை செயலாளர் ரஜினிதம்பி, கிளை செயலாளர்கள் ஜெயராஜ், காமராஜ், மூர்த்தி, சிவகுமார், பழனிச்சாமி, சம்பத், தங்கராஜ், சுப்பிரமணி, மோகன், சிதம்பரம், சின்னசாமி, ஏ.என். பழனிச்சாமி, செல்வகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment