குத்தகையாளர்கள்- வீடு - மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 July 2023

குத்தகையாளர்கள்- வீடு - மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்...

 


ஈரோடு கஸ்பாபேட்டையில் இனாம் நில விவசாயிகள் - குத்தகையாளர்கள்- வீடு  - மனை உரிமையாளர்கள் இயக்கத்தின்  ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையும், வக்பு வாரியமும் சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டம் - 1963 இன் கீழ் பட்டா பெற்ற விவசாயிகளையும், பட்டா பெற வாய்ப்பு கிடைக்காத மக்களையும்,  நில உரிமையாளர்களின் நில உரிமையை பறித்து சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கு நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு ஆக்குவது, பட்டாக்களில் பெயர் மாற்றம் செய்வது, அபகரிப்பாளர்கள் என்று சொல்லி வெளியேற்றுவது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.


பல வருடங்களுக்கு மேலாக குத்தகை விவசாயம் செய்து வருபவர்களுக்கு நில உரிமையை வழங்காமல், அநியாயமாக குத்தகையை உயர்த்துவது, வெளியேற்றுவது போன்ற அடாவடித்தனங்களையும் அறநிலைத்துறை செய்து வருகிறது.


இப்படி இந்து சமய அறநிலையத்துறையாலும், வக்பு வாரியத்தாலும் பாதிக்கபட்ட மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்புவதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இனாம் நில விவசாயிகள் - குத்தகையாளர்கள் - வீடு - மனை உரிமையாளர்கள் இயக்கம் தொடங்கப்பட்டு கோரிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.


இந்த கோரிக்கை குறித்து பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் பாதிக்கப்பட்டவர்களை மாநில அளவில் ஒருங்கிணைத்து, கோரிக்கைகளை முன்னெடுப்பதற்காக, மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம்  திருச்சியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் ஈரோடு  கஸ்பாபேட்டையில் ஆலோசனைக் கூட்டம், ஈரோடு கஸ்பாபேட்டை கிராம மக்கள் நல அறக்கட்டளை செயலாளர் ஏ.பி. நல்லசிவம்  தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி,  மாநில தலைவர் இரா.சண்முகசுந்தரம், மாநில பொது செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.


இதில் இனாம் நில விவசாயிகள் - குத்தகையாளர்கள்- வீடு  - மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் வெல்கேஷ் வெங்கடாசலம், கருணாமூர்த்தி, குண்டடம் ஒன்றிய பொருளாளர் சடையபாளையம் ராசு, 

ஈரோடு கஸ்பாபேட்டை கிராம மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மயில் (எ) டி. சுப்பிரமணி, பொருளாளர் ஏ.பி. சுரேஷ், வழக்கறிஞர் தங்கவேல், வட்டாட்சியர் (ஓய்வு) மாசிலாமணி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 


இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தால் பாதிக்கப்பட்ட 50 பெண்கள் உட்பட,

200 ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment